மக்களவை தேர்தல்: முதியோர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!

தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சார களம் அனல் வீசுகிறது. அனைத்து கட்சி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 4) காலை 7 மணிக்கு துவங்கியது. மாலை 6 மணி வரை வீடு வீடாக சென்று தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்குகளை சேகரிக்க உள்ளனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தபால் வாக்குப்பதிவானது நடைபெற்று வருகிறது.

85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தேர்தலின் போது நீண்ட வரிசையில் நின்று வாக்களிப்பது கடினமாக இருக்கும் என்பதால் அவர்கள் தபால் வாக்குப்பதிவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி இன்று முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்கலாம். இந்த மூன்று நாட்களில் வாக்களிக்க முடியாதவர்கள் ஏப்ரல் 8-ஆம் தேதி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வா? – மத்திய சுகாதாரத்துறை விளக்கம்!

“கெஜ்ரிவால் விரைவில் விடுதலை”: சஞ்சய் சிங் நம்பிக்கை!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts