‘கமான் செல்வா…’ செல்வப்பெருந்தகைக்கு சாண்ட்விச் ஊட்டிவிட்ட ராகுல்

Published On:

| By Aara

தேர்தல் பரப்புரை ஏப்ரல் 17 ஆம் தேதியோடு முடிந்துவிட்ட நிலையில், கட்சிகளின் தலைவர்கள் தங்களது பரப்புரை நாட்களில் ஏற்பட்ட சிலிர்ப்பான அனுபவத்தை, இன்று கிடைத்த இடைவெளியில்தான் தங்களுக்கு நெருக்கமான நிர்வாகிகளோடு பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த வகையில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும், அக்கட்சியின் நட்சத்திர தலைவர் ராகுல் காந்திக்கும் இடையில் ஏப்ரல் 12 ஆம் தேதி  நடந்த சுவாரஸ்யமான நெகிழ்ச்சியான  அனுபவம் பற்றி குறிப்பிட்டார்கள்.

“ஏப்ரல் 12 ஆம் தேதி ராகுல் காந்தி தமிழ்நாட்டில் நெல்லை, கோவை ஆகிய இடங்களில் பரப்புரை செய்ய வந்திருந்தார். இதுதான் ராகுல் காந்தி தமிழ்நாட்டு மக்களவைத் தேர்தலுக்காக வந்த ஒரே பயணம். இந்த பயணம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உணவை கூட பொருட்படுத்தாமல் ஏற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்திக்கொண்டிருந்தார்.

நெல்லை வந்த ராகுல் காந்தி டீ பிஸ்கட் சாப்பிட்டபோது செல்வப் பெருந்தகை டீ பிஸ்கட் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டார். மீண்டும் நெல்லையில் இருந்து விமான பயணமாக கோவை சென்றார் ராகுல். அப்போது ராகுலுடன் பயணித்தார் செல்வபெருந்தகை.

விமானத்தில் சாண்ட் விச் சாப்பிட்டார் ராகுல். அப்போது செல்வபெருந்தகையிடம் சாப்பிடச் சொல்ல அப்போதும் மறுத்திருக்கிறார் செல்வப்பெருந்தகை. ஏன் என்று ராகுல் கேட்க, ‘உங்கள் தமிழக பயணம் வெற்றிகரமாக நிறைவடையும் வரை சாப்பிடுவதில்லை என்ற நினைத்திருக்கிறேன். இதுவும் ஒரு விரதம் மாதிரிதான்…’ என்று சொல்லியுள்ளார் செல்வப்பெருந்தகை.

அதைக் கேட்ட ராகுல், ‘எனக்காகத்தானே ஃபாஸ்டிங் இருக்கீங்க? நானே சொல்றேன். சாப்பிடுங்க. நாம நடத்துற இந்த போராட்டத்துல மன பலமும் உடல் பலமும் ரொம்ப முக்கியம்’ என்று சொன்னதோடு, ’கமான் செல்வா…’ என்று செல்வப்பெருந்தகையை அழைத்து அவருக்கு சாண்ட்விச்சை ஊட்டிவிட்டிருக்கிறார்.

8 பேர் மற்றும் மேடை இன் படமாக இருக்கக்கூடும்

இந்த சிலிர்ப்பான அனுபவத்தை பரப்புரை முடிந்த பிறகுதான் தனது நண்பர்களிடம் மனம் விட்டு சொல்லியிருக்கிறார் செல்வப்பெருந்தகை” என்கிறார்கள்.

நாம் இதுகுறித்து நெல்லை தேர்தல் களத்தில் பணியாற்றிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜி.கே.முரளிதரனிடம் பேசியபோது,
“ராகுல் காந்திக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் இடையிலான உறவு மிக உணர்வுபூர்வமானது. தனது தந்தை ராஜீவ் காந்தி இந்தியாவுக்காக ரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்த ஸ்ரீபெரும்புதூர் மக்களின் சட்டமன்ற உறுப்பினர் என்று செல்வப்பெருந்தகை பற்றி அறிந்தபோதே ராகுல் காந்திக்கு அவர் மீது அலாதி அன்பு ஏற்பட்டது.

அதன் பின் செல்வப்பெருந்தகையின் செயல்பாடுகள் பற்றி  அறிந்துகொண்ட பிறகு அவரை மாநில தலைவராக்கி தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை உயர்ந்த இடத்துக்குக் கொண்டு செல்ல ராகுல் காந்தி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.

2 பேர் மற்றும் நபர்கள் புன்னகைகின்றனர் இன் படமாக இருக்கக்கூடும்

செல்வபெருந்தகையும் மாநில தலைவர் என்ற எவ்வித கர்வமும் இல்லாமல் அனைவரையும் அரவணைத்து, தேசிய தலைமையின் உத்தரவுகளை மிக செம்மையாக தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறார். செல்வப் பெருந்தகை மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் ராகுல் காந்தி, தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸில் முக்கிய மாற்றங்களை செல்வப்பெருந்தகை மூலமாக செய்ய இருக்கிறார். அதற்கான முழு சுதந்திரத்தையும் செல்வப்பெருந்தகைக்கு ராகுல் காந்தி அளித்திருக்கிறார். எனவே தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸில் ஆக்கபூர்வமான வரவேற்கத் தகுந்த மாற்றங்கள் நடக்கும்” என்கிறார்  நம்பிக்கையோடு.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

மசூதியை நோக்கி அம்பு விட்டதால் சர்ச்சை : மன்னிப்பு கோரினார் பாஜக வேட்பாளர்!

துபாயில் பெரு வெள்ளம் : மேக விதைப்பு காரணமா? காலநிலை மாற்றம் காரணமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share