முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் மார்ச் 9 ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசின் 2023-24 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கை, மார்ச் 3ஆவது வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட உள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான அமைச்சரவைக் கூட்டம் மார்ச் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் துறை சார்ந்த அமைச்சர்கள், தலைமைச் செயலர் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதில், மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவது பற்றி விரிவாக ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மணீஷ் சிசோடியா கைது: ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்…போலீஸ் தடியடி!
மதுரை எய்ம்ஸ்: அதிர்ச்சி தரும் ஆர்டிஐ தகவல்!