தமிழக அரசின் 2023-2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (மார்ச் 9 ) நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
புதிய தொழில் நிறுவனங்களுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.
மேலும் , விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இடம்பெற உள்ள அம்சங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உள்ளிட்ட திட்டங்கள், புதிய அறிவிப்புகள் குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? : அறிவித்தது டிஎன்பிஎஸ்சி
கிடாரிஸ்ட் கே. சந்திரசேகரன் மறைவுக்கு இளையராஜா இரங்கல்!