ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்காக பெறப்பட்ட ஒப்புதல் படிவத்தை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிப்பதற்காக அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று (பிப்ரவரி 6) டெல்லி புறப்பட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோரி எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும். கால அவகாசம் இல்லை என்றால் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வேட்பாளர் ஒப்புதல் படிவம் அனுப்பப்பட்டு அதன் மூலம் வேட்பாளரை அவைத்தலைவர் தேர்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
இந்த உத்தரவையடுத்து அதிமுக வேட்பாளராக தென்னரசு முன்மொழியப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வேட்பாளர் ஒப்புதல் படிவம் பிப்ரவரி 4-ஆம் தேதி அனுப்பப்பட்டது.
நேற்று மாலை 7 மணியளவில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட ஒப்புதல் படிவம் அதிமுக தலைமை அலுவலக்திற்கு வந்தது.
பெறப்பட்ட வேட்பாளர் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிப்பதற்காக அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் ஆகியோர் இன்று டெல்லி செல்கின்றனர்.
இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டு சென்று வேட்பாளர் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கின்றனர்.
செல்வம்
இந்துத்துவ சாதனைகள்: இமாலய ஊழலும், இரக்கமற்ற படுகொலைகளும்!
அதானி விவகாரம்: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!