தமிழுக்கு வெறும் ரூ.12 கோடி… அண்ணாமலை வாய் திறப்பாரா? – முத்தரசன்

அரசியல்

“சமஸ்கிருதத்துக்கு ரூ.199 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.12 கோடிக்கும் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு வளர்ச்சி, மக்கள் நலன் குறித்து நீலிக் கண்ணீர் வடித்து வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இதுபற்றி வாய் திறந்து பேசுவாரா?” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஒன்றிய அரசின் பிரதமர் மோடியும், பாஜகவும் தமிழ்நாட்டின் அரசியல் ஆதாயம் தேட பல்வேறு சாகசங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழில் இரண்டொரு வார்த்தைகள் பேசுவது, மகாகவி பாரதியார் கவிதைகள், திருக்குறள் உள்ளிட்ட தலைசிறந்த படைப்புகளில் சிலவற்றை மேற்கோள் காட்டி பேசுவது,

அண்மையில் காசியில் தமிழ் சங்கம விழா எடுத்தது என்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி, ஆரவார வாய்ச்சவாடல் அடித்து வருகின்றனர்.

ஆனால் தமிழ் மொழியை அழித்தொழிக்கும் வஞ்சகச் செயலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளை சமமாக அணுக வேண்டிய ஒன்றிய அரசு,

தமிழ் மொழி உட்பட பல மாநில மொழிகளை புறக்கணித்து, சமஸ்கிருத மொழியை திணித்து, ஏற்குமாறு நிர்பந்தித்து வருகிறது.

Tamil Language development

குறிப்பாக தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை வெட்டி குறைத்து, சமஸ்கிருத மொழிக்கு அதீத நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தமிழ் மொழி வளர்ச்சி தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அரசின் கல்வித் துறை இணையமைச்சர் அளித்த எழுத்து மூலமான பதிலில் சமஸ்கிருதத்துக்கு ரூ.199 கோடி ஒதுக்கியுள்ள நிலையில்,

தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.12 கோடிக்கும் குறைவாக நிதி ஒதுக்கியிருக்கும் தகவலைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு வளர்ச்சி, மக்கள் நலன் குறித்து நீலிக் கண்ணீர் வடித்து வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாய் திறந்து பேசுவாரா?,

எட்டுக் கோடிக்கும் அதிகமான மக்கள் பேசும் மொழியான தமிழுக்கு, தொன்மை சிறப்பும், இலக்கிய செறிவும் கொண்ட செம்மொழியாம் தமிழ் மொழியை அழித்தொழிக்கும் செயலை வாய் பொத்தி, கைகட்டி, முதுகை வளைத்து பணிந்து ஏற்பாரா என தமிழக மக்கள் வினா எழுப்பி வருகின்றனர்.

தமிழ்மொழிக்கு வஞ்சகம் செய்யும், மோடியின் ஒன்றிய அரசை, அதிகாரத்தில் இருந்து நீக்குவது மட்டுமே தமிழ் மொழிக்கு பாதுகாப்பாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

-ராஜ்

திமுக அரசை ஆதரிப்பதால் அவதூறு பரப்புகிறார்கள்: திருச்சி ஆதீனம் விளக்கம்!

கொரோனா ஆபத்தில் உதவிய நர்ஸுகளின் வேலையைப் பறித்த அரசு!

கிச்சன் கீர்த்தனா: புத்தாண்டு முதல் ‘டயட்’டைக் கடைப்பிடிக்கப் போறீங்களா?

+1
0
+1
0
+1
1
+1
4
+1
1
+1
0
+1
0

2 thoughts on “தமிழுக்கு வெறும் ரூ.12 கோடி… அண்ணாமலை வாய் திறப்பாரா? – முத்தரசன்

  1. இவரைப் பற்றியும், தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றியும் , (இலக்கியம், கவிதைகள் போன்றவற்றில்) நிதி ஒதுக்கீட்டில் அதிக அக்கறை காட்டுபவர்களைப் பற்றிய கூடுதல் விவரங்களைப் பெறு இயலுமா . தமிழின் வளர்ச்சி, தமிழின் வளர்ச்சிக்கான உறுதியான முன்மொழிவுகள் அவரிடம் உள்ளதா? குறிப்பிட்ட செயல்பாடுகள், மற்றும் குறிக்கோள் என்ன, குறிப்பிட்ட நிதியின் பயன்பாட்டை மதிப்பிடுவது,போன்றவை .

  2. மூளை முட்டி தம்பி
    அண்ணாமலை எத்தனை தடவை பதில் சொல்வார்..நீ ஆட்டேல இல்லங்குறார்யா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *