சென்னை கிண்டியில் பிரதமர் மோடியும் அம்பேத்கரும் என்ற நூல் வெளியீட்டு விழா இன்று (பிப்ரவரி 12) நடைபெற்றது. அந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் “உலகத்தின் உயர்ந்த மொழி தமிழ். அண்ணல் அம்பேத்கர் மிகச் சிறந்த தேசியவாதி. சமூகநீதி, சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்து சிந்தித்தவர். பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்தவர். பாகிஸ்தான் குறித்து அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை படித்துள்ளேன்.
இதுவரை அம்பேத்கரை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர். அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை மட்டுமல்ல, சமூக பிரச்னைகளுக்கு முன் நின்றவர். பள்ளிகளில் இருந்த பிரிவினை, கோயிலில் அனுமதி மறுக்கப்பட்டது உள்ளிட்டவற்றை எதிர்த்தவர் என்று கூறினார்.
மேலும், குடிநீர் தொட்டிகளில் மலம் கலப்பது உள்ளிட்ட செயல்கள் இன்றும் நடக்கின்றன. கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது போன்ற சம்பவங்களும் தொடர்கின்றன. இது வருத்தமளிக்கிறது.
பிரதமர் மோடி நாட்டைத் தன் குடும்பமாக பார்க்கிறார். இன்று பிரதமர் மோடியின் உரையை உலகமே உற்று நோக்குகிறது என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆளுநராக நியமிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன்: முதல்வர் வாழ்த்து!
சென்னை வந்த ஷாருக்: வழியனுப்பிய நயன்