போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி பேசியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் உடன் திமுகவை இணைத்து எக்ஸ் தளத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவு செய்திருந்தார். அதில், முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், “திமுகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள் நோக்கதுடன் பேசி வரும் எடப்பாடி பழனிசாமி ஒரு கோடி மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும். ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். எனவே, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுகவை தொடர்புபடுத்தி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று (நவம்பர் 8) விசாரணைக்கு வந்தது
அப்போது, ஆர்.எஸ் பாரதி தரப்பில் வழக்கறிஞர் மனுராஜ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி வாதம் வைத்தனர்.
இதையடுத்து வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டு டிசம்பர் 3ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
சபரிமலைக்கு செல்ல இது அவசியம்… பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை… வானிலை அப்டேட்!