அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியில் இருந்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று(ஏப்ரல் 20) ராஜினாமா செய்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களுக்கு ஆட்சிமன்ற குழு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
அதன்படி சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிண்டிகேட் உறுப்பினராக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.
ஒவ்வொரு மாதமும் பல்கலைக்கழகங்களில் சிண்டிகேட் குழு கூட்டம் நடைபெறும். பல்கலைக்கழகம் எடுக்கும் முக்கியமான முடிவுகளுக்கு இந்தக் குழு ஒப்புதல் அளிக்கும்.
பல்கலைக்கழக விவகாரங்களில் சிண்டிகேட் உறுப்பினர் பதவி அதிகாரம் மிக்கது.
அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவில் அலுவல் சாரா உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அப்போது அறிவித்திருந்தார். உதயநிதி ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டு தற்போது ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ளன.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியை உதயநிதி ஸ்டாலின் இன்று ராஜினாமா செய்துள்ளார். தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக செயல்பட்டு வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் சிண்டிகேட் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பல் பிடுங்கிய விவகாரம்: சிசிடிவி கேமரா செயல்படவில்லையா? – ஸ்டாலின் விளக்கம்!
கொடநாடு விவகாரம்: டென்ஷனான ஸ்டாலின்
அரைசதம் விளாசிய கோலி: பஞ்சாப் அணிக்கு 175 ரன்கள் இலக்கு!