ஒற்றுமை நடைபயணத்தில் மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகை ஸ்வரா பாஸ்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் செப்டம்பர் 7-ஆம் தேதி துவங்கினார். தொடர்ந்து கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் நவம்பர் 23-ஆம் தேதி முதல் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்தநிலையில், நேற்று (டிசம்பர் 1) மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜயினியில் ராகுல் காந்தியுடன் ஒற்றுமை நடைபயணத்தில் கலந்து கொண்ட நடிகை ஸ்வரா பாஸ்கர், மக்கள் அனைவரும் ஒற்றுமை நடைபயணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“ராகுல் காந்தியுடன் ஒற்றுமை நடைபயணத்தில் கலந்து கொண்டேன். அவரது ஆற்றல், அர்ப்பணிப்பு மற்றும் அன்பு ஊக்கமளிக்கிறது.
நடைபயணத்தில், பொது மக்களின் பங்கேற்பு மற்றும் காங்கிரஸ் தொண்டர்களின் உற்சாகம், மக்கள் மீதான ராகுல் காந்தியின் கவனம் வியக்கவைக்கிறது.

ஒற்றுமை நடைபயணத்தில் மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ராகுல் காந்தியை கடந்து சென்றபோது பெருகிவரும் கூட்டத்தில் இருந்த இளைஞன் ஒருவன் பூங்கொத்து ஒன்று கொண்டு வந்தான்.
மக்களின் ஆற்றலையும், அன்பையும் உணர ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தில் நீங்கள் கலந்து கொள்ளுங்கள். வெறுப்பை எதிர்த்து ராகுலுடன் நில்லுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமோல் பால்கேர், சந்தியா கோகலே, பூஜா பாட், ரியா சென், சுஷாந்த் சிங், மோனா அம்பேகோனார், ராஷ்மி தேசாய், ஆகான்க்ஷா பூரி உள்ளிட்ட திரைபிரபலங்கள் பாரத் ஜோடா நடைபயணத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்