மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் இல்லாத 4 மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று(டிசம்பர் 15)திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்டு நலம் விசாரித்து அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் சித்தா பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம், பிரசவத்திற்கு பிந்தைய வார்டு, ஆய்வகம் உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு செய்தார்.
மருத்துவமனையில் 16 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 12 மருத்துவர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.
அமைச்சர் ஆய்வு பணிக்கு வருவது தெரியாமல் பணி நேரத்தில் 4 மருத்துவர்கள் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக நான்கு மருத்துவர்களையும் சஸ்பெண்ட் செய்யும்படி அமைச்சர் உத்தரவிட்டார்.
அதேநேரத்தில் மருத்துவமனையின் செயல்பாடுகளை உரிய முறையில் கவனிக்காத மாவட்ட மருத்துவ இணை இயக்குனரை பணியிடமாற்றம் செய்யவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
கலை.ரா
விடிய விடிய மது அருந்திய தொழிலதிபர்: தீயில் கருகிய பரிதாபம்!
சரக்குக்கு சைடிஷான நாய்க்குட்டியின் வால்!