Amarprasad reddy came out

நீதிபதி வீட்டில் சூரிட்டி: வெளியே வந்த அமர்பிரசாத்

அரசியல்

பாஜக கொடிக்கம்பம் விவகாரத்தில் சிறையில் உள்ள அமர் பிரசாத் ரெட்டிக்கு உயர்நீதிமன்றம் நேற்று (நவம்பர் 10) ஜாமீன் வழங்கியதையடுத்து இன்று வெளியே வந்துள்ளார். Amarprasad reddy came out

பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு தலைவராகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வலது கரமாகவும் இருந்து வருபவர் அமர் பிரசாத் ரெட்டி.

கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி பனையூரில் உள்ள அண்ணாமலை வீடு முன்பு நடப்பட்ட கொடிக்கம்பத்தை காவல்துறையினர் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி வாகனம் மூலம் அகற்றினர்.

அப்போது அங்கு திரண்டிருந்த பாஜகவினர் ஜேசிபி வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் அமர் பிரசாத் ரெட்டி உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரும் ஜாமீன் கேட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி மேவிஸ் தீபிகா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து 6 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று (நவம்பர் 10) விசாரணைக்கு வந்தது.

அப்போது அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி,

“இரண்டு வாரங்களுக்கு கானாத்தூர் காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.

ஜேசிபி இயந்திரம் சேதப்படுத்தப்பட்டதற்காக அதன் உரிமையாளருக்கு ஆறு பேரும் தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் 12 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

நேற்று ஜாமீன் வழங்கிய நிலையில் சனிக்கிழமை (இன்று), ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை விடுமுறை என்பதால், தீபாவளிக்கு பிறகு தான் அமர் பிரசாத் ரெட்டி சிறையில் இருந்து வெளியே வர முடியும் என்ற சூழல் ஏற்பட்டது.

ஆனால் அமர்பிரசாத் ரெட்டி தரப்பு வழக்கறிஞர்கள் நேற்று இரவு நீதிபதி வீட்டிற்கே சென்று சூரிட்டி கொடுத்துள்ளனர். இதனை நீதிபதியும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஜாமீன் வழக்கில் நீதிபதி வீட்டிற்கே சென்று சூரிட்டி கொடுப்பது என்பது அரிதான ஒன்று.

இதனிடையே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமர் பிரசாத் ரெட்டியின் மனைவியிடம் “தீபாவளிக்குள் உங்கள் கணவர் வெளியே வருவார்” என்று உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் தான் அமர் பிரசாத் ரெட்டி தற்போது சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். Amarprasad reddy came out

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா 

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

தித்திக்கும் தீபாவளி… தினமும் கொண்டாடுங்கள்!

+1
0
+1
3
+1
0
+1
1
+1
3
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *