“அது எங்களால் முடியாது”: ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் மறுப்பு!

Published On:

| By Kavi

Supreme Court rejected the case

ஆளுநருக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 3) தள்ளுபடி செய்தது. Supreme Court rejected the case

தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரின் போது, ஆளுநர் உரையாற்றாமல் வெளிநடப்பு செய்தார்.

இந்த நிலையில் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விசாரணையில் இருந்து வருகிறது.

ஆளுநருக்கு எதிராக வழக்கறிஞர் ஜெய சுகினும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தனது மனுவில், “அரசியல் சாசனத்துக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார். அவரைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் இன்று (பிப்ரவரி 3) விசாரணைக்கு வந்தது.

உத்தரவிட மறுப்பு! Supreme Court rejected the case

அப்போது, “அரசியல் சாசனத்தின்படி அமைச்சரவையின் வழிகாட்டுதலோடு ஆளுநர் செயல்பட வேண்டும் எனவும், ஆனால் ஆளுநர் ரவி அவ்வாறு செயல்படுவதில்லை” என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கின் உரையை படிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததற்கு எதிரான மனுவை விசாரிக்க மறுப்புத் தெரிவித்தனர்.

அப்போது மனுதாரர் தரப்பில், சட்டப்பேரவையை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஆளுநர் அவமதித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், “ஆளுநரை திரும்ப பெற கோரிய மனுதாரரின் கோரிக்கையை ஏற்று எங்களால் உத்தரவிட முடியாது. நாங்கள் அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டவர்கள்” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தமிழக ஆளுநர் தொடர்பாக ஏற்கனவே ஒரு வழக்கை விசாரித்து வருவதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். Supreme Court rejected the case

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel