இரட்டை இலை சின்னம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழு, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆனது ஆகியவற்றுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
தொடர்ந்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கில், “இரட்டை இலை சின்னம் தொடர்பாக பன்னீர் செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்” என்று கடந்த டிசம்பர் 4ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மனுதாரர் கே.சி.பழனிசாமி, புகழேந்தி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் சூரியமூர்த்தி மனு தாக்கல் செய்துள்ளார். கட்சியில் உறுப்பினராக இல்லாத இவர் எப்படி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்ய முடியும். அவரது மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இதையடுத்து இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த தடை உத்தரவை எதிர்த்து எம்.ஜி.ராமச்சந்திரன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை இன்று (ஜனவரி 20) விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரரை சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக அறுவுறுத்தியது.
உயர்நீதிமன்றத்தின் முடிவில் தலையிட மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தி.மலை மண்சரிவு : பாதிக்கப்பட்ட 20 குடும்பங்கள்… எ.வ.வேலு செய்த எதிர்பாரா செயல்!
லெபனான் – தயாரிப்பு நிறுவனத்துக்கு தெரியாமலேயே பேஜரில் குண்டு : அதிர்ச்சித் தகவல்!