சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்து வருவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (நவம்பர் 20) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. governor rn ravi case
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இந்த வழக்கு நவம்பர் 10-ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனுசிங்வி, முகுல் ரோத்தகி, வில்சன் ஆகியோர் ஆஜராகி,
“ஆளுநர் ரவி மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருப்பதன் மூலம் அரசாங்கத்தின் செயல்பாடுகளை முடக்கி வைக்கிறார்.
ஆளுநர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் As Soon As Possible என்ற வார்த்தையை தமிழக ஆளுநர் தவறாக புரிந்துகொண்டு செயல்படுகிறார்.
இது அரசின் உரிமைகளையும் மக்களின் அடிப்படை உரிமைகளையும் பறிக்கும் விஷயம்” என்ற வாதங்களை முன்வைத்தனர்.
இதனை தொடந்து, தமிழக அரசு ஆளுநர் ரவி குறித்து எழுப்பிய பிரச்சனைகள் மிகுந்த கவலை அளிப்பதாகவும் கோப்புகளின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் ஏன் நிலுவையில் வைத்துள்ளார் என மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 20-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
உச்சநீதிமன்ற கடுமைக்கு பிறகு ஆளுநர் ரவி 10 மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார்.
இதனை தொடர்ந்து நவம்பர் 18-ஆம் தேதி சிறப்பு சட்டமன்றம் கூட்டப்பட்டு மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அன்றைய தினமே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தசூழலில் உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிரான வழக்கு இன்று வரவுள்ள நிலையில் ஆளுநர் ரவி நேற்று டெல்லி சென்றார். சட்ட வல்லுநர்களுடன் உச்சநீதிமன்ற வழக்கு குறித்து அவர் ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்துவருவதாக அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது. governor rn ravi case
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: ஷக்கர்கந்தி (சர்க்கரைவள்ளிக் கிழங்கு) சாட்