சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இன்று (ஜூலை 12) இடைக்கால ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.
புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக குற்றம்சாட்டி டெல்லி மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 11-ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.
இந்தநிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக கெஜ்ரிவாலுக்கு ஜூன் 2-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இடைக்கால ஜாமீன் நிறைவடைந்ததும் ஜூன் 2-ஆம் தேதி திஹார் சிறையில் கெஜ்ரிவால் சரணடைந்தார்.
இந்தநிலையில், அமலாக்கத்துறை கைதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபங்கர் தத்தா அமர்வு இன்று தீர்ப்பளித்து.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “அரவிந்த் கெஜ்ரிவால் 90 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். அதனால் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிடுகிறோம். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதை நாங்கள் கருத்தில் கொண்டு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளோம்” என்று தெரிவித்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
68வது பிலிம்பேர் விருதுகள்: கமல் முதல் தனுஷ் வரை… வென்றது யார்?
வாரத்தின் இறுதிநாள் பங்குச்சந்தை: ஏற்றம் காணுமா?