சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 26) நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து அவரது தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உச்சநீதிமன்றத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியபோது, “செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக விசாரணை குற்றவாளியாக இருப்பதால் அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
25 லட்சம் ரூபாய்க்கு இரண்டு நபர்கள் ஜாமீன் கொடுக்க வேண்டும், ஒவ்வொரு திங்கள் கிழமையும் வெள்ளிக் கிழமையும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும். அனைத்து குற்றவியல் நடைமுறை விசாரணைக்கும் ஒத்துழைப்பு தரவேண்டும். தேவையில்லாமல் வாய்தாக்கள் வாங்கக்கூடாது. சாட்சியங்களை கலைக்கக்கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மீண்டும் அமைச்சர் ஆவதற்கு பிணையில் ஏதேனும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கிறதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த என்.ஆர்.இளங்கோ, “அதுபோன்ற எந்த நிபந்தனைகளும் உச்சநீதிமன்றம் விதிக்கவில்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
எஸ்.பி.பி பெயரில் சாலை… முதல்வருக்கு நன்றி தெரிவித்த எஸ்.பி.பி மகன்!