பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி பண மோசடி செய்த புகாரில், ராஜேந்திர பாலாஜி தனிப்படை போலீசாரால் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி, கர்நாடகா மாநிலத்தின் ஹாசன் நகரில் கைது செய்யப்பட்டார். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தை அணுகிய அவருக்கு ஜனவரி 12ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
ராஜேந்திர பாலாஜி, தனது பாஸ்போர்ட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும், காவல் நிலைய எல்லையைத் தாண்டி செல்லக்கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

ஜாமீன் நிபந்தனைகளைத் தளர்த்தக்கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த வழக்கு இன்று (செப்டம்பர் 12) விசாரணைக்கு வந்தபோது, ன ஜாமீன் நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
அதன்படி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விசாரணை அதிகாரியிடம் சொல்லிவிட்டு தமிழ்நாட்டில் அனைத்து இடங்களுக்கும் செல்லலாம்.
வெளி மாநிலங்களுக்கு செல்ல அனுமதி கிடையாது. ராஜேந்திர பாலாஜி சாட்சியங்களை கலைக்க முயற்சிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செல்வம்