டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (மே 13) தள்ளுபடி செய்தது.
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், மே 10 தேதி, திகார் சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
தற்போது ஆம் ஆத்மி மற்றும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சந்திப் குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், 50,000 ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்தது. விளம்பரத்துக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக நீதிமன்றம் கூறியது.
இந்த நிலையில் கெஜ்ரிவாலை தகுதி நீக்கம் செய்யக்கோரி காந்த் பாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா அமர்வில் இன்று (மே 13) விசாரணைக்கு வந்தது.
அப்போது டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட மறுத்த நீதிபதிகள், “இந்த மனுவை தாக்கல் செய்ய சட்டப்படியான உரிமை என்ன? அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் அதை துணை நிலை ஆளுநர் முடிவெடுக்கட்டும். நாங்கள் ஏன் இதில் தலையிட வேண்டும். உரிமை இருக்கிறது என்று நீங்கள் எதாவது சொல்லலாம் ஆனால் சட்டப்பூர்வ உரிமை எதுவும் இல்லை” என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டெல்லியில் கைது செய்யப்பட்டு திருச்சி கொண்டு செல்லப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்ட்
சிபிஎஸ்இ பிளஸ் 2 ரிசல்ட்: 87.98% தேர்ச்சி!