ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 20) உத்தரவிட்டுள்ளது.
உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் பெலா எம் திரிவேதி, சதிஷ் சந்திரா சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி “செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்ததில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. அதனால் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
அப்போது நீதிபதிகள், “அவருக்கு சமீபத்தில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யப்பட்டதாக தெரியவில்லையே?” என்று கேள்வி எழுப்பினார்.
முகுல் ரோத்தகி, “உண்மையான மருத்துவ அறிக்கையை நீதிபதிகள் விரும்பினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராக உள்ளோம். மேலும் செந்தில் பாலாஜிக்கு மூளைச்சோர்வு, இதய வால்வு பிரச்சனை, பித்தப்பையில் கல் இருப்பதாக தெரியவந்துள்ளது.
செந்தில் பாலாஜி சிகிச்சை பெற உரிமை இல்லையா? அவருக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு தேவை” என்ற வாதத்தை முன்வைத்தார்.
இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 28-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜயகாந்துக்கு செயற்கை சுவாச சிகிச்சையா? – தேமுதிக விளக்கம்!
Bigg Boss 7 Day 49: கைதட்டல் கேட்டு புலம்பிய பூர்ணிமா