கட்சி தொடங்கப்பட்டபோதே, வருகிற நாடாளுமன்றத் தேர்தல் நமது இலக்கு இல்லை. நமது இலக்கு 2026 சட்டமன்றத் தேர்தல் தான் என விஜய் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின், வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கு பாடுபடுவோம்.
கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் தொடங்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மார்ச் 31 தேதியிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பெயரிலான ஒரு கடிதம் சமூக தளங்களில் பரவியது.
அதில், “வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தின் வெற்றியை மட்டும் பாராமல் ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சியையும் யார் கருத்தில் கொண்டு செயல்படுகிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். திராவிட பிரிவினைவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்” என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழக தலைமை வட்டாரங்களில் விசாரித்தோம். அப்போது, “இந்த அறிக்கை போலியானது. விஜய் இதுபோன்ற எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. குழப்பத்தை ஏற்படுத்தும் இணைய விஷமிகளின் வேலை இது” எனத் தெரிவித்தனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Paiyaa: கார்த்தியின் ஜோடியாக ‘நடிக்க’ வேண்டியது இவர் தானாம்!
டிடிவி தினகரன் Vs தங்க தமிழ்செல்வன்…தேனியின் லேட்டஸ்ட் நிலவரம் என்ன?