இன்னாள், முன்னாள் அமைச்சர்கள் மீது தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்குகளில் தற்போதைய அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் கீழமை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டனர்.
கீழமை நீதிமன்றங்களின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார். தற்போது நிர்வாக ரீதியாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டார்.
இந்த சூமோட்ட வழக்குகளை தற்போது நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்து வருகிறார். இன்று கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பொன்முடி மற்றும் ஓ.பன்னீர் செலவம் மீதான வழக்குகள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது, தலைமை பதிவாளர் தரப்பில், அமைச்சர் பொன்முடி மீதான சூமோட்ட வழக்கில் எதிர்மனுதாரராக நீதிமன்றம் தன்னை சேர்த்துள்ளதாகவும், தனது தரப்பு வாதத்தை முன்வைக்க அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் மட்டுமல்ல, இன்னாள், முன்னாள் அமைச்சர்கள் மீதான அனைத்து வழக்குகளிலும் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா? என விளக்கமளிக்க வேண்டும் என்று தலைமை பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
இதற்கு அனைத்து வழக்குகளிலும் பதில் அளிப்பதாகவும், அதற்கு கால அவகாசம் வேண்டும் என்றும் தலைமை பதிவாளர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்று வழக்கு விசாரணையை ஜனவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
QR Code பரிவர்த்தனை செய்கிறீர்களா? – உங்களுக்கான எச்சரிக்கை இதோ!
Comments are closed.