வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
தற்போது நீலகிரி தொகுதி எம்.பியாக இருக்கும் ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2015 ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
7 வருட விசாரணைக்குப் பிறகு எம்.பி. ஆ.ராசா, அவரது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எதிராக கடந்த மாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த குற்றப்பத்திரிக்கையில், குற்றம் சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தைவிட 579 சதவீதம் அதிகமாக ரூ. ரூ.5.53 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், இன்று(நவம்பர் 29) நீதிபதி சிவக்குமார் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.
குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, எம்.பி.ஆ.ராசா, உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஜனவரி 10 ஆம் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.
கலை.ரா
மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான மரப்பாதை: போலீஸ் பாதுகாப்பு!
ராகிங் விவகாரம் : மேலும் 3 மாணவர்கள் இடைநீக்கம்!