2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை இன்று (ஏப்ரல் 5) அக்கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் வெளியிட்டனர்.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:
தற்போது நடைமுறையிலுள்ள ஜிஎஸ்டி சட்டத்திற்கு பதிலாக, ஜிஎஸ்டி 2.0 சட்டம் கொண்டுவரப்படும்.
பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணிகளில் ஒப்பந்த முறைக்கு பதிலாக நிரந்தர பணியிடங்கள் உருவாக்கப்படும்.
தனியார் கல்வி நிறுவனங்களில் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டுவரப்படும்.
சாதி அடிப்படையில் மாணவர்கள் துன்புறுத்தப்படுவதை தவிர்க்க ரோகித் வெமுலா சட்டம் கொண்டுவரப்படும்.
மூத்த குடிமக்கள், விதவைகள், ஊனமுற்றோருக்கான ஓய்வூதியம் ரூ.1000-ஆக உயர்த்தப்படும்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவிகித EWS இட ஒதுக்கீடு அனைத்து சமுதாயத்தினருக்கும் வழங்கப்படும்.
2024 வரையிலான மாணவர்களுக்கான கல்வி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
ஜம்மு, காஷ்மீர் மற்றும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் நாள் ஒன்றிற்கு ரூ.400-ஆக உயர்த்தப்படும்.
மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து பொதுப்பட்டியலில் உள்ள சில பிரிவுகள் மாநில பட்டியலுக்கு மாற்றப்படும்.
தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சுதந்திரமான விசாரணை நடத்தப்படும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுவோருக்கு தினக்கூலியாக ரூ.400 நிர்ணயம் செய்யப்படும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமல்படுத்தப்படாது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மகளிருக்கு வருடம் 1 லட்சம் ரூபாய் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்!
IPL 2024: ‘வந்துட்டாப்ல வந்துட்டாப்ல’… கொண்டாட்டத்தில் மும்பை ரசிகர்கள்!