தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது நடை பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று (நவம்பர் 8) இரவு திருச்சியில் மக்களை சந்தித்து பொதுக்கூட்டத்தில் பேசினார். Stalin’s baked vadai egg wizard Udayanidhi
அப்போது திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பதற்காக திடீரென மேடையில் வடையை தூக்கி காண்பித்தார் அண்ணாமலை.
ஏற்கனவே எய்ம்ஸ் விவகாரத்தில் திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ஒற்றை செங்கல்லை உயர்த்தி காண்பித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அது பெரும் பேசுபொருளானது. அதேபோல சமீபத்தில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்து பேசும்போது முட்டையைத் தூக்கி காண்பித்தார். முது நிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் முட்டை மார்க் வாங்கினாலே போதும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை விமர்சனம் செய்ய உதயநிதி முட்டையை காண்பித்தார்.
இந்த நிலையில்தான் உதயநிதியின் செங்கல், முட்டை தாக்குதலுக்கு பதிலடியாக திருச்சியில் அண்ணாமலை நேற்று வடையை உயர்த்திக் காண்பித்தார்.
திருச்சியில் பேசிய அண்ணாமலை, “திருச்சி திமுகவில் இரு தலைவர்களாக இருக்கும் அமைச்சர் கே.என்.நேருவும், அமைச்சர் அன்பில் மகேஷும் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அன்பில் மகேஷுக்கு உதயநிதியோடு சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கவே 90% நேரம் போய்விடுகிறது, சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள 10% போய்விடுகிறது. தொகுதிக்கு வருவதற்கும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சகத்துக்கு செல்வதற்கும் அவருக்கு ஏது நேரம்?” என்று விமர்சித்துக் கொண்டிருந்தபோதே அருகே நின்ற பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் அண்ணாமலையின் காதில் ஏதோ கிசுகிசுத்தார்.
அதன் பின் மேடையில் பின்னால் நின்றிருந்தவர்கள் தயாராக வைத்திருந்த நான்கைந்து மெது வடைகளை வாங்கிய கருப்பு முருகானந்தம், அதை மேடையில் இருந்த முக்கிய நிர்வாகிகளுக்கு கைக்குள் கையாக வைத்துக் கொடுத்தார். ‘தின்னுடாதீங்க… வச்சிக்கங்க’ என்று நிர்வாகிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்போது பேசிக் கொண்டிருந்த அண்ணாமலை, “உதயநிதி ஸ்டாலின் இப்போது கையில் ஒரு முட்டையை தூக்கிக் கொண்டு சுற்றி வருகிறார். ஊரில் முட்டை மந்திரவாதி என்று சொல்வார்களே, அதுபோலத்தான் இருக்கிறது. நீட்டை ஒழிக்க ரகசியம் இருக்கிறது என்று சொல்லி மக்களை ஏமாற்றிவிட்டு இப்போது கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்.
இதேபோல முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவர் சட்டமன்றத் தேர்தலை சந்தித்தபோது திருச்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நினைவுபடுத்துகிறேன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருச்சியில் ஆட்டோ நகர் அமைக்கப்படும், திருச்சி அருகே நவீன வசதிகளுடன் புற நகர் அமைக்கப்படும், பக்தர்களை மலைக்கோவிலுக்கு அழைத்துச் செல்ல ரோப் கார் சேவை திருச்சியில் தொடங்கப்படும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க திருச்சியில் எலிவேட்டடு ஹைவே அமைக்கப்படும், திருச்சியிலே மெட்ரோ திட்டம் கொண்டுவரப்படும், மூன்று ஆண்டுகளில் திருச்சியில் பன்னோக்கு மருத்துவமனை அமைப்போம், இப்படி ஸ்டாலின் கொடுத்த எந்த வாக்குறுதியையும் திருச்சியிலே நிறைவேற்றவில்லை.
இவையெல்லாம் ஸ்டாலின் சுட்ட வடைகள். முட்டை மந்திரவாதி உதயநிதிக்கும் சேர்த்துதான் இந்த வடைகளை காட்டுகிறோம்” என்று சொல்லி சட்டென கருப்பு முருகானந்தத்திடம் இருந்து வடையை வாங்கி தன் விரலில் செருகி அதை உயர்த்திக் காட்டினார் அண்ணாமலை.
மேடையில் இருந்த நிர்வாகிகளும் அண்ணாமலையோடு மெதுவடையை உயர்த்திக் காட்டினார்கள். அண்ணாமலையுடன் சமீபத்தில் பாஜகவில் மீண்டும் பதவி அளிக்கப்பட்ட திருச்சி சூர்யாவும் இருந்தார். Stalin’s baked vadai egg wizard Udayanidhi
–வேந்தன்
ICC world cup 2023: நியூசிலாந்து – இலங்கை… மழை குறுக்கிட்டால் அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?