மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்!

அரசியல்

தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும் இப்பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண வலியுறுத்தியும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 23) கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “மயிலாடுதுறை மாவட்டம்‌ தரங்கம்பாடியைச்‌ சேர்ந்த 6 மீனவர்கள்‌ கடந்த 21.02.2023 அன்று தரங்கம்பாடி மீனவ கிராமத்தில்‌ இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச்‌ சென்றுள்ளனர்.‌

பாரம்பரிய கடற்பகுதியில்‌ மீன்பிடித்துக்‌ கொண்டிருந்தபோது, இன்று (பிப்ரவரி 23) அதிகாலை 8.30 மணியளவில்‌ இலங்கைக்‌ கடற்படையினர்‌ அவர்களை இரும்பு கயிறுகளைக்‌ கொண்டு தாக்கியுள்ளனர்.

அவர்களின்‌ மீன்பிடி உபகரணங்கள்‌ இரண்டு பேட்டரிகள்‌, என்ஜின்‌ மற்றும்‌ ஜி.பி.எஸ்‌ கருவிகளை எடுத்துச்‌ சென்றுவிட்டனர்‌.‌ இத்தாக்குதலில்‌ காயமடைந்த ஐந்து மீனவர்கள்‌ தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்‌.

இந்தத்‌ தாக்குதல்‌, அனைத்து சர்வதேச விதிமுறைகள்‌ மற்றும்‌ மரபுகளை அப்பட்டமாக மீறுவதாகும்‌. பாக்‌ வளைகுடா பகுதியில்‌ நமது மீனவர்களின்‌ பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை இலங்கைக்‌ கடற்படை தொடர்ந்து மீறி வருவதுடன்‌,

நமது மீனவர்களுக்கு கடுமையான காயங்களையும்‌, பொருளாதார இழப்புகளையும்‌ அடிக்கடி ஏற்படுத்துகின்றனர்.‌ இலங்கை கடற்படையினரின்‌ இத்தகைய வன்முறைச்‌ செயல்கள்‌ அதிர்ச்சியளிப்பதுடன்‌, கண்டனத்திற்குரியதாகும்.

நமது மீனவர்கள்‌ தமது வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிப்பதை மட்டுமே நம்பியுள்ளனர்‌. மீனவர்கள்‌ மீது அடிக்கடி தாக்குதல்கள்‌ நடத்தப்படுவது மீனவர்கள்‌ மத்தியில்‌ அச்சத்தையும்‌ பீதியையும்‌ ஏற்படுத்தியுள்ளது.

இவ்விவகாரத்தை இலங்கை அரசிடம் வலுவாக எடுத்து சென்று நமது இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க உயர்மட்ட அளவிலான உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த தூதரக வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

பாமக வேளாண் நிழல் பட்ஜெட்: சிறப்பம்சங்கள் என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *