ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று 13 மாநில ஆளுநர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
அதில், தமிழக பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திட விழைகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
”நாட்டு நாட்டு” பாடலுக்கு நடனமாடிய ஆனந்த் மஹிந்திரா: கற்றுக்கொடுத்த ராம் சரண்
ஏடிஎம் இயந்திரத்தை தீயிட்டு கொளுத்திய மர்ம கும்பல்: போலீசார் விசாரணை!