வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முழுமையாக தோற்கடிக்கப்படுவார் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறைக் கூட்டம் திருவண்ணாமலையில் இன்று (அக்டோபர் 22) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், “திமுக ஆட்சியின் திட்டங்கள் எதிரிகளை அச்சமடைய வைத்திருக்கிறது. சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.
தனது வயிற்றெரிச்சலை கொட்டியிருக்கிறார். திமுக எந்த புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்று சொல்லியிருக்கிறார்.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பச்சை பொய்யர் பழனிசாமி. அதிமுக தொடங்கி வைத்த திட்டங்களுத்தான் நாம் ரிப்பன் வெட்டுகிறோம் என்று சொல்கிறார். இதுதான் அவர் சொன்னதில் மிகப்பெரிய பொய்.
கலைஞர் மகளர் உரிமைத் தொகைத் திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், புதுமைப்பெண் திட்டம், இலவச பயண திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம், 2 லட்சம் உழவர்களுக்கு மின் இணைப்பு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர், தமிழ் பரப்புரை கழகம்… இவை எல்லாம் அதிமுக கொண்டு வந்த திட்டமா எடப்பாடி பழனிசாமி?.
பெரியார், அம்பேத்கர், பாரதியார் உள்ளிட்டோருக்கு விழாக்களை நடத்தி வருகிறோம். இந்த கொள்கைகள் என்வென்றாவது கம்பராமாயணம் படித்த பழனிசாமி சொல்வாரா?
வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக போராடிய தியாகிகளுக்கு மணி மண்டபம் அமைத்துக்கொண்டு வருகிறோமே, இது அதிமுக ஆட்சியில் போட்ட திட்டமா?
ஆட்சிக்கு வந்து ஆயிரம் நாட்கள் கூட ஆகவில்லை.. ஆனால் ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்கிறது . இது பழனிசாமி கண்ணுக்கு ஏன் தெரியவில்லை. இன்னும் தரையில் தான் ஊர்ந்துகொண்டிருக்கிறாரா? தலையை தூக்கிதான் பாருங்கள்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
4 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யாமல், இப்போது பதவி பறிபோன பிறகு தன்னைப்போலவே எல்லோரும் இருப்பார்கள் என்று நினைக்கிறார் போல.
பாஜகவுக்கு எப்படியெல்லாம் பல்லக்கு தூக்கினார் என்பது தெரியும். தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜகவிடம் அடகு வைத்தவர். இதுதான் அவர்களது வரலாறு.
குட்கா அமைச்சர் வீட்டுக்கு ரெய்டு வந்த வரலாறை மறக்க முடியுமா? சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் ஆறாத வடுவாக இருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்றார்.
உங்களது முகத்திரையை நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் கிழித்தெறிந்துவிட்டது. பொள்ளாச்சி சம்பவம் மறந்துவிட்டதா?
இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்கிறார்.
திமுக குடும்ப கட்சி என்று சொல்கிறார் எடப்பாடி. நான் இப்போது அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன் திமுக குடும்ப கட்சி தான் கோடிக்கணக்கான தமிழ் குடும்பங்களை வாழ வைக்கிற குடும்ப கட்சி தான் திமுக.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
சம்பந்திக்கும், சம்பந்தியோட சம்பந்திக்கும் காண்ட்ராக்ட் கொடுத்து உயர் நீதிமன்றத்துக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் ஓடிக்கொண்டிருக்க கூடிய உங்களுக்கு குடும்ப கட்சியை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி முழுமையாக தோற்கடிக்கப்படுவார். பாஜகவுடன் கூட்டணியில் இருந்தால் டெபாசிட் கூட கிடைக்காது என நினைத்து தனியா பிர்ந்தது போல் நாடகம் நடத்தி கொண்டிருக்கிறார்.
சிறுபான்மையினர் மீது திடீரென பாசம் பொங்குகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்புரிமை ரத்து, முத்தலாக் என எல்லா சட்டத்துக்கு கண்ணை மூடி ஆதரித்தவர் எடப்பாடி பழனிசாமி.
பாஜகவுக்கு எப்படியெல்லாம் பல்லக்கு தூக்கினார் என்பது தெரியும். இப்படி எல்லாம் பேசிவிட்டு தற்போது எடப்பாடி நாடகம் ஆடுகிறார். தேர்தல் நெருங்கும் போது எடப்பாடி பழனிசாமியின் நாடகம் அம்பலமாகிவிடும்” என்று குறிப்பிட்டார்.
பிரியா
“நீங்கள் தான் சீக்ரெட் ஆப் மை எனர்ஜி” : திருவண்ணாமலையில் ஸ்டாலின் பேச்சு!
5 மாநில தேர்தல்… வெற்றி வாய்ப்பு யாருக்கு? அலசல் மினி தொடர்!
INDvsNZ: 274 ரன்கள் இலக்கு.. நியூசிலாந்தை பழி தீர்க்குமா இந்தியா?