கள ஆய்வு நிகழ்ச்சிக்காக திருவாரூர் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்… திருவாரூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோயில் குளமான கமலாலயத்தின் கரையில் அமர்ந்து தனது பழைய நினைவுகளை அசை போட்டார்.
கலைஞரின் சொந்த ஊர் திருக்குவளையாக இருந்தாலும் திருவாரூர் தான் கலைஞர் வளர்ந்த ஊர். அந்த வகையில் கலைஞரின் சிறு வயது காலங்கள் திருவாரூரில் தான் கழிந்தன. கலைஞர் காலமாகும் போதும் அவர் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராகவே இருந்தார்.
இந்த நிலையில் தனது சொந்த ஊரான திருவாரூருக்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (பிப்ரவரி 21) இரவு திடீரென கமலாலய கரைக்கு செல்ல ஆசைப் பட்டுள்ளார்.
திமுக பொருளாளர் டி ஆர் பாலு எம்பி, திருவாரூர் மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் ஆகியோர் சகிதம் கமலாலய கரைக்கு சென்று தனது இளமைக்கால திருவாரூர் நினைவுகளை அசை போட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இது குறித்து அவர் தனது சமூக தள பதிவில், “கலைஞர் வளர்ந்த திருவாரூரில் உள்ள கமலாலயம், கடல் போலத் ‘தோற்றமளிக்கும்’. ஆனாலும் அது குளம்தான்.
அதன் ‘நடுவண்’ கோயில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர்நீச்சலை நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் தலைவர்.
இன்று அந்தப் படிக்கட்டுகளில் அமர்ந்து மகிழ்ந்தபோது, குளத்தின் அலைகளில் என் சிறு வயது நினைவுகள்.
நெஞ்சத்தில் என்றும் நினைவலைகளாக முத்தமிழறிஞர்”என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
வேந்தன்
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை விட்டுப் பிடிக்கும் மோடி… பன்னீருக்கு தொடரும் பாஜக பயம்… பின்னணி என்ன?