ராகுல் காந்தி தனக்கு ஸ்வீட் கொடுத்ததற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 13) நன்றி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக நேற்று (ஏப்ரல் 12) தமிழகம் வந்த ராகுல் காந்தி, நெல்லை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுடன் கோவையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
முன்னதாக கோவை சிங்காநல்லூரில் உள்ள ஸ்ரீ விக்னேஷ்வரா ஸ்வீட் கடைக்கு சென்ற ராகுல் காந்தி, மைசூர் பாக் வாங்கினார். அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர், “யாருக்காக மைசூர் பாக் வாங்குகிறீர்கள்?” என்று கேட்டபோது, “எனது சகோதரர் ஸ்டாலினுக்காக வாங்குகிறேன்” என்று ராகுல் காந்தி பதிலளித்தார். பின்னர் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் வைத்து ஸ்வீட் பாக்சை ஸ்டாலினிடம் கொடுத்தார்.
இதுகுறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ராகுல் காந்தி, “தமிழகத்தில் பிரச்சாரத்திற்கு இனிமை சேர்க்கும் வகையில் எனது சகோதரர் ஸ்டாலினுக்கு கொஞ்சம் மைசூர் பாக் வாங்கி கொடுத்தேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ். எனது சகோதரர் இனிப்பு வழங்கியதை கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். ஜூன் 4-ஆம் தேதி இந்தியா கூட்டணி நிச்சயம் அவருக்கு இனிப்பான வெற்றியை அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: வெளியேறிய பிரபல நடிகை… காரணம் இதுதானா?
கோவைக்கான தொழில் திட்டத்தை குஜராத்திற்கு மடைமாற்றிய பாஜக: ஸ்டாலின் குற்றச்சாட்டு!