டிஜிட்டல் திண்ணை: சீனியர்களாக இருந்தாலும்… ஸ்ட்ரிக்ட் ஸ்டாலின்… அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள்!

Published On:

| By Aara

வைஃபை  ஆன் செய்ததும், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட டாக்டர் லட்சுமணன் உற்சாகமான வரவேற்போடு விழுப்புரத்தில் லேண்ட் ஆன வீடியோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. Stalin strict action against seniors

இதை பார்த்து கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“பிப்ரவரி 13ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் திமுகவில் அதிரடியாக மாவட்ட செயலாளர் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.

இதில் விழுப்புரம் மாவட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் திமுகவின் சீனியரும் துணைப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பொன்முடியை ரொம்பவே அதிருப்திக்கு ஆளாக்கியது.

அவரது மகன் டாக்டர் கௌதம சிகாமணி வசம் இருந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் மாவட்ட தலைநகரமான விழுப்புரம், வானூர் இரண்டையும் பிரித்து விழுப்புரம் மத்திய மாவட்டம் ஆக்கி டாக்டர் லட்சுமணனை மாவட்ட செயலாளராக நியமித்தார் ஸ்டாலின்.

இதற்கு பொன்முடி தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனபோதும் நேற்று பிப்ரவரி 15ஆம் தேதி பொன்முடி, லட்சுமணன் இருவரையும் அறிவாலயத்துக்கு அழைத்து தனது இரு பக்கத்திலும் இருவரையும் நிறுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டு விழுப்புரத்திற்கு அனுப்பி வைத்தார் ஸ்டாலின். அதையடுத்து இன்று விழுப்புரம் சென்ற டாக்டர் லட்சுமணனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஏற்கனவே அமைச்சரவை மாற்றத்தின் போதும் சீனியர் அமைச்சரான பொன்முடி உயர் கல்வித் துறையில் இருந்து வனத்துறைக்கு மாற்றப்பட்டார். இப்போது மாவட்ட செயலாளர்கள் மாற்றத்திலும் சீனியரான பொன்முடி தரப்பின் மீது தான் கை வைத்திருக்கிறார் ஸ்டாலின்.

இதுகுறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரித்த போது… Stalin strict action against seniors

‘தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டுவது, மரியாதை செலுத்துவது, அன்பு செலுத்துவது இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கட்சி என்று வந்துவிட்டால் கறாராக இருக்கிறார் ஸ்டாலின்.

வருகிற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டுமோ… அதையெல்லாம் உரியவர்களின் ஆலோசனைகளை பெற்று தயக்கம் இல்லாமல் இப்போது நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்து இருக்கிறார்.

அதில் முதல் ஸ்டெப் தான் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியான மாவட்ட செயலாளர்கள் மாற்றங்கள்.

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியை பொன்முடியின் மகனிடம் இருந்து எடுத்து, லட்சுமணனிடம் கொடுக்கும் பட்சத்தில் அறிவாலயம் அமைந்திருக்கும் சட்டமன்றத் தொகுதி எனக்கு வேண்டும் என பொன்முடி கேட்பாரே என்று முன்கூட்டியே யோசித்திருக்கிறார் ஸ்டாலின்.

இது தொடர்பாக நடந்த ஆலோசனையில், ‘இப்படித்தான் சேலத்தில் மாவட்ட அலுவலகமான அறிவாலயத்தை வீரபாண்டியார் கட்டி எழுப்பினார். அதற்குப் பிறகு அவருடைய மகன் வீரபாண்டி ராஜா மாவட்ட செயலாளராக இருந்தார். அவர் மாற்றப்பட்டு பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது பனமரத்துப்பட்டி ராஜேந்திரனின் மாவட்டத்தில்தான் அறிவாலயம் இருக்கிறது.

அதேபோலத்தான் இப்போதும் விழுப்புரம் மாவட்ட அறிவாலயம் லட்சுமணனின் கட்டுப்பாட்டில் இருக்க போகிறது. விழுப்புரம் மத்திய,  வடக்கு,  தெற்கு என மூன்று மாவட்டங்களுக்கும் சேர்த்து தான் அது கட்சி அலுவலகம். எனவே கட்சி அலுவலகத்தை இன்னார்தான் வைத்திருக்க வேண்டும் என யாரும் சொந்தம் கொண்டாட முடியாது’  என்று அந்த ஆலோசனையிலேயே குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். Stalin strict action against seniors

இந்த மாவட்ட செயலாளர் மாற்றத்திற்கு பிறகு… திமுகவில் அடுத்தடுத்து அதனுடைய மாற்றங்கள் இருக்கின்றன என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

அதுவும் குறிப்பாக சீனியரான பொன்முடியின் மகன் டாக்டர் கௌதம சிகாமணியிடமிருந்து இரண்டு மாவட்டங்களை பிரித்தாகிவிட்டது. இதே போல இன்னும் சில சீனியர்களின் வசம் இருக்கும் கொத்துக்கொத்தான சட்டமன்ற தொகுதிகளை பிரித்து ஆங்காங்கே ஆக்டிவான மாவட்ட செயலாளர்களை நியமிக்க இருக்கிறார் ஸ்டாலின்.

பொன்முடி தெரிவித்த எதிர்ப்பே அறிவாலயத்தில் எடுபடவில்லை என்ற நிலையில்… இதையே மற்ற சீனியர்களுக்கும் மெசேஜாக சொல்லி… கட்சி நன்மைக்காக எந்த அதிரடியையும் ஸ்டாலின் செய்ய தயாராகிவிட்டார்.

இந்த மாற்றங்களுக்கு உட்பட போகிற மாவட்டங்களில் கடலூரும் ஒன்று. அதேபோல தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையிலும் அதிரடியான கட்சியின் கட்டுமான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார் ஸ்டாலின்.

சென்னையில் அமைச்சர்கள் சேகர்பாபு,  மா. சுப்பிரமணியம் ஆகியோர் கணிசமான சட்டமன்றத் தொகுதிகளை தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள். தற்போதைய எழும்பூர் சட்டமன்ற உறுப்பினரான பரந்தாமன் துணை முதல்வர் உதயநிதியின் தீவிர ஆதரவாளர். அவருக்கு  மாவட்ட செயலாளர் உறுதி என்கிறார்கள் குறிஞ்சி வட்டாரத்தில்.

அதேநேரம் முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியை கவனித்து வருபவர் அமைச்சர் சேகர்பாபு தான். எனவே அமைச்சர் சேகர்பாபுவின் செல்வாக்கை குறைக்கும் வகையில் முதலமைச்சர் சீரமைப்பு செய்வாரா என்ற கேள்வியும் சென்னை திமுகவுக்குள் இருந்துள்ளது.

எந்த மாற்றம் செய்தாலும் கட்சி நன்மை கருதி ஏற்றுக்கொள்ளும் ஒரு சூழலை பொன்முடியை முன்னுதாரணமாக வைத்து ஸ்டாலின் உருவாக்கி விட்டார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share