ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்: ஜெயக்குமார்

அரசியல்

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டிக்கு பதிலளித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று (ஜூன் 15) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “ போக்குவரத்து துறையில் ஊழல் செய்த விவகாரத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜியை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பதவியிலிருந்து நீக்கினார். சட்டப்படி நடவடிக்கை எடுக்க கூறினார். அவரை அமைச்சராக்கி அழகு பார்த்தது திமுக அரசு. அதனால் தான் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு தக்க விசுவாசம் காட்டி வருகிறார்.

கனிமொழி ,ராசா ஆகியோரை கைது செய்யும் போது அமைதியாக இருந்த திமுக, தற்போது செந்தில் பாலாஜி கைதில் முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை துடிக்கின்றனர்.

2016 ல் தலைமை செயலாளர் அறையில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதை சட்டம் தன் கடமையை செய்கிறது எனக் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை சோதனையால் துடிப்பது ஏன்.?. விசாரணையை தைரியமாக எதிர் கொள்ள வேண்டியது தானே.

நெடுஞ்சாலைத்துறையில் 4000 கோடி ஊழல் தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி மீது தான் போட்ட வழக்கை ஆர்.எஸ் பாரதி வாபஸ் பெற்றதை அறியாதவராக இருக்கிறார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

பொய்குற்றசாட்டுகளை வேண்டுமென்றே எடப்பாடியார் மீது சுமத்துகிறார். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொன்ன 30 ஆயிரம் கோடி தொடர்பாகவும் விரைவில் விசாரணை நடைபெறும்.

செந்தில் பாலாஜி ஆம்பளையாக இருந்திருந்தால் அழுதிருக்க கூடாது.
அழுது புரண்டு புலம்பலாமா?

பொதுவாக 30 வயதுக்கு மேல் நெஞ்சுவலி வருவது வழக்கம். 30 சதவீதம் அடைப்பு உள்ள ஒருவருக்கு ஆஞ்சியோ கிராம் சிகிச்சை அளிப்பது தமிழகத்தில் தான் நடக்கிறது.

மா.சுப்பிரமணியன் பக்கத்துவீட்டு மனையையே அபகரித்தவர். மனைவியின் தகப்பன் பெயரையே மாற்றியவர் தான் மா.சுப்பிரமணியன், குடும்பத்தோடு விசாரணைக்கு சென்றவர்கள், செந்தில் பாலாஜி கைது சம்பவம் தமிழக மக்களுக்கு தலைகுனிவு.

அமைச்சர் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியிலிருந்து விலக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

செந்தில் பாலாஜியை சந்திக்க அனுமதி மறுப்பு!

செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *