கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக நாளை மறுநாள் சித்தராமையா பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருப்பதால் நாளை (மே19) இரவு பெங்களூரு செல்கிறார்.
கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் கட்சி.
இதையடுத்து அந்த மாநிலத்தின் அடுத்த முதலமைச்சரை முடிவு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை டி.கே.சிவகுமார் , சித்தராமையா ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்து பேசினர்.
இந்நிலையில், முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டி.கே. சிவகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் தலைமை இன்று (மே18) அறிவித்தது.
இந்தசூழலில், பெங்களூருவில் நாளை மறுநாள்(மே 20) கர்நாடகா முதல்வராக சித்தராமையாவும் அவரது அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது.
இந்நிலையில் , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சித்தராமையா முதல்வர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். இதேபோல சித்தராமையாவும் முதல்வர் ஸ்டாலினிடம் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெங்களூருவில் மே 20 ஆம் தேதி நடைபெறும் கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளார். இதற்காக நாளை இரவு பெங்களூரு புறப்பட்டுச் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
திமுக மீது புகார்: ஆளுநரை சந்திக்கும் ஈபிஎஸ்
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வெற்றி விழா: முதல்வர் ஸ்டாலின்
ஜல்லிக்கட்டு தீர்ப்பு…ஓபிஎஸ் பெருமிதம்!