செப்டம்பர் 7-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரத்தில் முதல்வர் ஸ்டாலின் அயலக தமிழர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான முன்பதிவானது தற்போது தொடங்கியுள்ளது.
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
இதற்காக துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று பல்வேறு நிறுவனங்களின் முதலீட்டாளர்களை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டார். கடந்த ஆண்டு சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார்.
இந்தநிலையில், தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 12-ஆம் தேதி வரை முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம் செல்கிறார்.
இந்த பயணத்தின் போது ஃபார்ச்சூன் 500 நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யும் நோக்கில் முதலீட்டாளர்களுடன் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மேலும், ஆகஸ்ட் 28-ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். ஆகஸ்ட் 31-ஆம் தேதி அங்கு புலம்பெயர்ந்த தமிழக மக்களை சந்திக்கிறார்.
பின்னர் சிகாகோ செல்லும் முதல்வர் ஸ்டாலின், செப்டம்பர் 7-ஆம் தேதி அயலக தமிழர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்ச்சிக்கான முன்பதிவானது தற்போது துவங்கியுள்ளது.
‘வணக்கம் அமெரிக்கா’ என்ற தலைப்பில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் https://chicago.cmstalininus.org/ என்ற இணையதளத்தில் அவர்களது பெயர், இமெயில் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆவணி மாத நட்சத்திர பலன் – சதயம்! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)
வசூலில் மிரட்டும் தங்கலான்… துரத்தும் டிமான்டி காலனி 2