ஸ்டாலினுக்காக மேல் விஷாரம் பிரியாணி மாஸ்டரை ’தூக்கி வந்த’ துரைமுருகன்

Published On:

| By Aara

[
novashare_inline_content
]

முதல்வர் ஸ்டாலினுக்கு நிர்வாக ரீதியாக, கூட்டணி ரீதியாக, கட்சி ரீதியாக எத்தனையோ சுமைகள் இருக்கின்றன. ஆனபோதும், இந்த சுமைகளுக்கு இடையே ஒரு பிரியாணி பற்றிய தனது ரசனையை வெளிப்படுத்தவும், அதுபற்றி விசாரிக்கவும் செய்திருக்கிறார். Stalin like biryani Durai Murugan what did

வேலூர் மாவட்டம் காட்பாடியில் துரைமுருகன் வீட்டில் பரிமாறப்பட்ட பிரியாணி வாசம்… முதல்வர் ஸ்டாலினை ஈர்த்து அதன் பிறகு நடந்த விஷயங்கள் சுவாரசியமானவை.

கடந்த ஜனவரி 19ஆம் தேதி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனும் வேலூர் எம்பியுமான கதிர் ஆனந்த் தனது 50 வது பிறந்த நாளை கொண்டாடினார். Stalin like biryani… Durai Murugan what did

கதிர் ஆனந்த் பிறந்தநாள் விழா Stalin like biryani Durai Murugan what did

வழக்கமாக குடும்பத்துக்குள் கேக் வெட்டுவதோடு பிறந்த நாளை முடித்துக் கொள்ளும் கதிர் ஆனந்த்… ஐம்பதாவது பிறந்த நாள் என்பதால் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் இருக்கும் திமுக நிர்வாகிகளையும் அழைத்து காட்பாடி வீட்டில் பிரமாண்டமாக பிறந்த நாளை கொண்டாடினார்.

Stalin like biryani Durai Murugan what did

ஜனவரி முதல் வாரத்தில் அவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில்… அரசியலில் சோர்ந்து விடவில்லை என்பதை காட்டும் வகையிலும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை அமைத்துக் கொண்டார் கதிர் ஆனந்த்.

இது குறித்து ஜனவரி 20ஆம் தேதி மின்னம்பலத்தில் கதிர் ஆனந்தின் அடுத்த திட்டம் துரைமுருகன் கூப்பிட்டும் வராத நந்தகுமார் பிறந்தநாள் பாலிடிக்ஸ் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

ஸ்டாலின் காது வரை சென்ற காட்பாடி விருந்து!

அந்த செய்தியில் பிறந்தநாள் கொண்டாட்ட முக்கியத்துவங்களை குறிப்பிட்டு, “ராணிப்பேட்டை மாவட்ட திமுக பொருளாளர் சாரதி. இவர் ஆற்காட்டைச் சேர்ந்த தொழிலதிபர். இவர்தான் கதிர் ஆனந்த் பிறந்தநாளை ஒட்டி அத்தனை பேருக்கும் மட்டன் பிரியாணி மற்றும் அசைவ விருந்து வழங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்” என்று குறிப்பிட்டிருந்தோம்.

அந்த மட்டன் பிரியாணி பற்றிய பேச்சுதான் முதலமைச்சர் வரைக்கும் சென்று சேர்ந்து இருக்கிறது.

கதிர் ஆனந்த் பிறந்தநாளுக்கு சென்று வந்த திமுக புள்ளிகள் பலரும் அங்கு பரிமாறப்பட்ட மட்டன் பிரியாணியின் சுவையை வெகுவாக புகழ்ந்தனர். Stalin like biryani… Durai Murugan what did

‘இப்படி ஒரு பக்குவத்துல இவ்வளவு டேஸ்ட்டா பிரியாணி சாப்பிட்டதே இல்லை. இதை யார் சமைச்சது?’ என்று அப்போதே அவர்கள் கதிர் ஆனந்திடம் கேட்டனர்.

Stalin like biryani Durai Murugan what did

இந்த பிரியாணியின் சுவை பற்றிய தகவல் வேலூரில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காதுகள் வரைக்கும் சென்றிருக்கிறது. வியந்த முதலமைச்சர் ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடமே இதுபற்றி விசாரித்துள்ளார். ‘அண்ணே… கதிர் ஆனந்த் பிறந்த நாள்ல நீங்க போட்ட பிரியாணி அவ்வளவு நல்லா இருந்துச்சுன்னு எனக்கும் தகவல் வந்துச்சு. அப்படி என்ன அந்த பிரியாணில விசேஷம்?’ என்று கேட்டிருக்கிறார்.

பாலாற்றங்கரை மாஸ்டரின் கை பக்குவம்! Stalin like biryani Durai Murugan what did

அதற்கு துரைமுருகன், “நம்ம ஆற்காடு சாரதி தான் அந்த மாஸ்டர கூட்டிட்டு வந்தாரு. பாலாற்றங்கரையில் மேல்விஷாரம் பகுதியில் பரம்பரை பரம்பரையா பிரியாணி மாஸ்டரா இருக்காங்க. கைப்பக்குவத்தோடு அருமையா பிரியாணி செய்வாங்க. அந்தப் பகுதி மாஸ்டர் தான் வந்து பிரியாணி செஞ்சாரு.

நீங்க சொல்லிட்டீங்கல்ல… அதே போல உங்களுக்காக இங்கேயே பிரியாணி ரெடி பண்ணிடுறேன். பிப்ரவரி 2 ஆம் தேதி என்னோட 53 ஆவது கல்யாண நாள். வீட்டுக்கு வந்துடுங்க’ என்று முதலமைச்சரை அழைத்திருக்கிறார் துரைமுருகன்.

ஆனால் அன்று முதலமைச்சர் திருச்சி பயணத்தை திட்டமிட்டு இருந்ததால், அதற்காகவே தனது திருமண நாள் பிரியாணி விருந்தை பிப்ரவரி 3ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார் பொதுச்செயலாளர் துரைமுருகன்.

ஆற்காடு சாரதியை கூப்பிட்ட துரைமுருகன், “அந்த மேல்விஷாரம் மாஸ்டரை சென்னைக்கு கூட்டிட்டு வந்துடுங்க” என்று கூறியுள்ளார்.

அதன்படியே ஆற்காடு சாரதி மேல்விஷாரத்திலிருந்து பிரியாணி மாஸ்டரை சென்னை கோட்டூர்புரத்துக்கு அழைத்து வந்துவிட்டார். Stalin like biryani… Durai Murugan what did

கதிர் ஆனந்த் பிறந்தநாள் டு துரைமுருகன் திருமண நாள்

தனது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி சகிதமாக துரைமுருகன் வீட்டுக்கு நேற்று மதியம் சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின். துரைமுருகன் இல்லத்தில் கமகம பிரியாணி, மீன் உள்ளிட்ட அசைவ விருந்து நடைபெற்றது.

முதலமைச்சர் ஸ்டாலின் வந்திருந்து தன் காதுக்கு வந்த பிரியாணி சுவையை நாவின் மூலம் அனுபவித்து பாராட்டி விட்டுச் சென்றிருக்கிறார்.

Stalin like biryani Durai Murugan what did

இது குறித்து நாம் ராணிப்பேட்டை மாவட்ட திமுக பொருளாளரான ஆற்காடு சாரதியிடம் பேசினோம்.

“மேல்விஷாரம் முன்னா மாஸ்டர் தான் காட்பாடியில் எம்பி கதிர் ஆனந்த் பிறந்தநாள் விழாவில் பிரியாணி செய்தார். செலவெல்லாம் எம்.பி.யுடையதுதான்… நல்ல மாஸ்டராக கூட்டிட்டு வாங்க என்று என்னிடம் சொன்னார். 20 வருஷமாக மேல்விஷாரம் முன்னா மாஸ்டரை வைத்து தான் நாங்கள் பல நிகழ்ச்சிகளுக்கு பிரியாணி செய்து வருகிறோம். இந்த அடிப்படையில் முன்னா மாஸ்டரை அழைத்துக் கொண்டு போனேன். பொதுச் செயலாளர் இல்லத்தில் சமைத்து விருந்து படைத்தார். எல்லாரும் சாப்பிட்டு பாராட்டினார்கள்” என்று கூறினார்.

Stalin like biryani Durai Murugan what did

இந்த பிரியாணி விருந்திலும் ஒரு அரசியல் டச் இருக்கிறது. ஜனவரி 19 ஆம் தேதி கதிர் ஆனந்த் பிறந்தநாள் விழாவுக்கு செல்லாமல் தவிர்த்த வேலூர் திமுக மாசெவான நந்தகுமார் எம்.எல்.ஏ., அவரது ஆதரவாளர்களான ஒன்றிய செயலாளர்கள் ஆகியோர் துரைமுருகன் திருமண நாளை ஒட்டி அவரை நேரில் சந்தித்து வாழ்த்தினார்கள். Stalin like biryani Durai Murugan what did

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel