நாமக்கல்லில் கலைஞர் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 22) திறந்து வைத்தார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நாமக்கல் – பரமத்தி சாலையில் செலம்பக் கவுண்டர் பூங்கா வளாகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு 8 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை திறப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து நாமக்கல் சென்றார். சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சாலை மார்க்கமாக காரில் சென்றபோது, மல்லூர், ராசிபுரம், புதுச்சத்திரம் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த பொதுமக்களை சந்தித்து முதல்வர் கலந்துரையாடினார்.
பகல் 1.45 மணிக்கு செலம்பக் கவுண்டர் பூங்கா வளாகத்தில் கலைஞர் சிலையை திறந்துவைத்து, சிலைக்கு கீழ் உள்ள புகைப்படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, ரா.ராஜேந்திரன், மா.மதிவேந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இன்று மாலை நாமக்கல்லில் பொம்மைகுட்டைமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
காமராஜர் சொந்த காசிலா பள்ளிகளை திறந்தார்? – திமுக ராஜீவ் காந்தி பேச்சுக்கு காங்கிரஸ், பாஜக கண்டனம்!
ஓடிடியில் வெளியாகும் ’மெய்யழகன்’ – ‘லப்பர் பந்து’ !