செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் பட்டு வேட்டி சட்டையில் வருகைத் தந்துள்ளார்.
இந்தியாவில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி இன்று மாலை தொடங்கியிருக்கிறது. வி.ஜே பாவனா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், விழா அரங்குக்கு முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி அணிந்து வந்து கலந்துகொண்டுள்ளார்.
பிரியா