முதலீடுகளை ஈர்க்க சிகாகோ சென்ற ஸ்டாலின்

அரசியல்

முதல்வர் ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து முதலீடுகளை ஈர்க்க சிகாகோ சென்றுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். முதலில் சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்ற ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசுக்கும் நோக்கியா, பேபால், ஈல்டு இன்ஜினியரிங்ஸ், மைக்ரோசிப், ஓமியம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் 1,300 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 4,600 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் முதலீட்டாளர்களை சந்தித்து வரும் அதே வேளையில், ஓய்வு நேரங்களில் ஒருசில இடங்களையும் சுற்றிப்பார்த்துள்ளார்.

நேற்று ஜாகுவார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட  டிரைவர் இல்லாத தானியங்கி காரில் ஸ்டாலின் பயணித்த வீடியோ வைரலானது.

அதுபோன்று சான்பிரான்சிஸ்கோவில் டோனி பென்னட் சிலை முன்பு தனியாகவும், தனது மனைவியோடும் முதல்வர் எடுத்த புகைப்படமும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 3) சான் பிரான்சிஸ்கோவில் இருந்து முதல்வர் ஸ்டாலின் சிகாகோ சென்றுள்ளார்.

சிகாகோ சென்றடைந்த ஸ்டாலினுக்கு புலம்பெயர் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நடனம், சிலம்பம் என பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. சிகாகோவில் முக்கிய தொழில் நிறுவனங்களை பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்கவுள்ளார்.

ஏற்கனவே 1300 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ள நிலையில் சிகாகோவில் முதல்வர் எத்தனை கோடி முதலீடுகளை ஈர்ப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

வரும் 7ஆம் தேதி சிகாகோ வாழ் தமிழர்களை சந்தித்து பேசும் அவர், தனது பயணத்தை முடித்துக் கொண்டு 14ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

நடிகை ரீமா கல்லிங்கல் நடத்தும் பார்ட்டி… எத்தனை இளம் பெண்கள்… பாடகி சுசித்ரா வீசும் குண்டு!

சீமான் மீதான எஸ்சி/எஸ்டி வழக்கு : விசாரணை அதிகாரி நியமனம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *