இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமலாக்கத் துறை நடவடிக்கையை தொடர்ந்து செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கு முதல்வர் ஸ்டாலின், திமுக கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்தசூழலில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் ரவி நிறுத்தி வைத்துள்ளார் என ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டது.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள் ரகுபதி, தங்கம் தென்னரசு, திமுக எம்.பி.வில்சன், “ஆளுநரின் கடிதத்தை நிராகரிக்கிறோம். அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதுவார்” என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், “இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. முதலமைச்சரின் தலைமையில் கீழ் செயல்படும் அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. அமைச்சர் பொறுப்பில் புதிதாக ஒருவரை சேர்ப்பது அல்லது நீக்குவது என்பது முதல்வரின் முடிவுக்கு உட்பட்டது. பதவி பிரமாணம் செய்து வைப்பதற்கு மட்டுமே ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்” என்று அரசு வட்டார தகவல்கள தெரிவிக்கின்றன.
பிரியா
நான் ராஜினாமா செய்ய மாட்டேன் : மணிப்பூர் முதல்வர்!
ஆசிய ஸ்குவாஷ் போட்டி: இந்தியா சம்பியன்!
மாமன்னன் முதல் நாள் வசூல் எவ்வளவு?