டிஜிட்டல் திண்ணை: அன்புமணி மூலம் அமித்ஷாவுக்கு செக் வைத்த ஸ்டாலின்

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் நெய்வேலியில் அன்புமணி நடத்திய போராட்டக் காட்சிகளும் ராமேஸ்வரத்தில் அண்ணாமலை பாதயாத்திரை காட்சிகளும் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“பொதுவாகவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வருகிறார் என்றால்… அவர் சாதாரணமான நிகழ்ச்சிக்காக வந்தார் என்றால் கூட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி சில நாட்களுக்கு முன்பே விவாதங்கள் களை கட்டும். அமித் ஷாவின் ஒவ்வொரு நகர்வும் ஒவ்வொரு சந்திப்பும் பேசு பொருளாகும்.

ஆனால் ஜூலை 28ஆம் தேதி மாலை அமித்ஷா ராமேஸ்வரத்தில் அண்ணாமலையின் நடை பயணத்தை துவங்கி வைத்த நிகழ்வு, ஊடகங்களில் முந்தைய அமித் ஷாவின் தமிழக விசிட் அளவுக்கு முக்கியத்துவம் பெறவில்லை. அதற்குக் காரணம் நேற்றும் இன்றும் என்எல்சி விவகாரத்தை மையமாக வைத்து அன்புமணி நடத்திய போராட்டங்கள் தான்.

ஜூலை 26 ஆம் தேதி என்எல்சி நிர்வாகம் வளையமாதேவி கிராம பகுதியில் ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்களை அழித்து கால்வாய் தோண்டும் பணியில் ஈடுபட்டது. இது கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக மாறியது.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ஜூலை 28ஆம் தேதி என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நேற்று அறிவித்தார். 24 மணி நேர அவகாசமே இருந்த போதும் இன்று சுமார் 1000-க்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் அன்புமணி தலைமையில் என்எல்சி முன்பு திரண்டார்கள். அப்போது காவல்துறையினருக்கும் பாமகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

வெறும் அரசியல் சார்ந்தது மட்டும் இல்லை.. அண்ணாமலையின் நடைபயணம் ஏன்? லிஸ்ட் போட்ட அமித்ஷா | TN BJP Leader Annamalai Padayatra is not just political: Amit Shah explains - Tamil ...

நேற்றும் இன்றும் என்எல்சி விவகாரம் தான் தமிழக ஊடகங்களில் பெரும் பரப்பை ஆக்கிரமித்து இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ஒரு கட்டத்தில் கைது செய்யப்பட சேலம் முதல் சென்னை வரை பல்வேறு மாவட்டங்களில் அன்புமணி கைது செய்யப்பட்டதை கண்டித்து பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மாலை ராமேஸ்வரத்தில் அமித்ஷா நடை பயண தொடக்க விழா மேடை ஏறிய நிலையில் அன்புமணி விடுதலை செய்யப்பட்டார். அப்போதும் அன்புமணி விடுதலை செய்யப்பட்ட செய்திகள் பிரேக்கிங் நியூஸ் களாக தெறித்தன. ராமேஸ்வரத்தில் நடைபயண மேடையில் இருந்த பாஜக நிர்வாகிகளிடையே இதுதான் விவாதிக்கப்பட்டது.

அதாவது திமுக அரசு நினைத்திருந்தால் இன்று அன்புமணியின் போராட்டம் நடக்க விடாமல் செய்திருக்கலாம். ஆனால் அந்தப் போராட்டத்திற்கு அனுமதியும் கொடுக்காமல் அதே நேரம் முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாமக தொண்டர்களை என்எல்சி முன்பு திரளும் வரை போலீஸ் எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அன்புமணியின் போராட்டம், அதில் அவர் கைது, அதற்குப் பிறகு அவர் கைதை கண்டித்து பல மாவட்டங்களில் போராட்டம் என்று இன்றைய நாள் முழுவதையும் அமித்ஷாவின் தமிழ்நாடு விசிட் செய்தியில் இருந்து திசை திருப்புவதற்காகவே போலீஸ் பாமக விடம் சற்று தளர்வு காட்டி இருக்கிறது என்று பாஜக பிரமுகர்கள் ராமேஸ்வரத்தில் விவாதித்துக் கொண்டனர்.

இதே நேரம் திமுக வட்டாரத்தில் விசாரித்த போது… ‘எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தின் மீது கவன ஈர்ப்பு வராமல் பார்த்துக் கொள்வதுதான் ஆளுங்கட்சியின் அரசியல். அண்ணாமலை நடை பயணத்தை அமித்ஷா துவக்கி வைக்கிறார் என்று அறிவிக்கப்பட்ட போதே… அந்த நடை பயணத்தின் முக்கியத்துவத்தை எவ்வாறெல்லாம் குறைக்கலாம் என்று சபரீசன் ஆலோசித்து சில திட்டங்களை போட்டார்.

சமூக தளங்களில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடை பயணத்திற்கு எதிராக இன்று காலை முதலே… என் ஆடியோ என் வீடியோ என்ற ஹேஷ் டிராக் டிரெண்டிங் ஆனது. இதில் திமுக ஐடி வின் பங்கு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் எதிர்பாராமல் என்எல்சி கால்வாய் வெட்டும் விவகாரம் வெடிக்க அதை வைத்து பாமக போராட்டம் அறிவித்தது. இதை திமுக கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டது. இன்னும் சொல்லப்போனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பதாக சொல்லப்படும் பாமக தலைவர் அன்புமணியின் போராட்டத்தின் மூலமாகவே அமித்ஷா துவக்கி வைக்கும் நடை பயணத்தின் முக்கியத்துவத்தை ஊடக வெளியில் குறைத்தது திமுக.

நேற்றும் இன்றும் நெய்வேலியில் நடந்த விவகாரங்களை வைத்து ராமேஸ்வரத்தை டம்மியாக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளோம் என்கிறார்கள் திமுகவினர்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

2023ன் சிறந்த மனிதர்: விருது பெற்ற மு.க.ஸ்டாலின்

அண்ணாமலை நடைபயணத்தை துவக்கி வைத்தார் அமித்ஷா

+1
1
+1
1
+1
0
+1
12
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *