திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடங்கியது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1 ) தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இந்நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரமாண்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில்,காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் இன்னும் விழா பொதுக்கூட்டத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் , இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
முடங்கிய ட்விட்டர்: ட்ரெண்ட் ஆகும் #TwitterDown ஹேஸ்டேக்!
சரவணா ஸ்டோர்ஸில் தீ விபத்து: ஒரு மணி நேரமாக போராடும் தீயணைப்பு வீரர்கள்!