மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, சென்னையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி நடத்தப்பட்டு, நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. Stalin Basebiul Rally respect anna
மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினம் இன்று (பிப்ரவரி 3) அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி, முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து அமைதிப்பேரணி இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.

இந்த பேரணியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரை முருகன், சேகர்பாபு, எ.வ.வேலு, திமுக எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, எல்.எல்.ஏ.,க்கள் மற்றும் நூற்றுக்கணக்கான நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
பின்னர், காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தை அடைந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினர் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து அண்ணா நினைவிடம் அருகிலுள்ள கலைஞர் நினைவிடத்திலும் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதே போன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு திமுகவினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.