பொதுக்குழு அரங்கத்துக்கு வந்தடைந்தார் மு.க.ஸ்டாலின்
திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் சென்னை அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்ஸ் கன்வென்ஷன் சென்டருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தடைந்தார்
திமுக 15-வது பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. பொதுக்குழு நடைபெறும் இடத்தின் முகப்பு தோற்றம் கலைஞர் அரங்கம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் இல்லம் அமைந்துள்ள சித்தரஞ்சன் சாலை முதல் அமைந்தகரை வரை வழிநெடுகிலும் மு.க.ஸ்டாலினை தொண்டர்கள் மலர் தூவி மேள தாளங்களுடன் வரவேற்றனர் .
இரண்டாவது முறையாக திமுக தலைவராக பொறுப்பேற்க இருக்கும் ஸ்டாலினை வாழ்த்தி பேனரும் வைக்கப்பட்டுள்ளது
பொதுக்குழு நடைபெறும் இடத்தில் மேள தாளங்கள் முழங்க நாட்டுப்புற கலைஞர்கள் நடனமாட அதை ரசித்தபடியே கூட்டத்துக்கு வந்தடைந்தார் மு.க.ஸ்டாலின்.
திமுக பொதுக்குழு கூட்டத்தில் எம்.ஜி.ஆரிடம், ஸ்டாலின் வாழ்த்து பெறும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
காலை முதலே பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்தனர்.
அழைப்பிதழ் பேட்ஜ் இல்லாத திமுக நிர்வாகிகள் பொதுக்குழுவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
செல்வம்
‘ஹரா’ படத்தில் குஷ்புவுடன் டூயட் : மோகன்
பொன்னியின் செல்வனில் மணிரத்னம் செய்யும் மாற்றம்!