இந்தியாவின் மாநிலமாக இலங்கை மாற வாய்ப்புள்ளதாக அந்நாட்டு எம்.பி. விமல் வீரவன்ச பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவரான இவர் கொழும்பு மாவட்டத்தின் எம்.பியாக உள்ளார்.
நுவரெலியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த விமல் வீரவன்ச, இந்தியாவை தாக்கி பேசி உள்ளார்.
அவர் பேசுகையில், ” பொருளாதார நெருக்கடியில் சிக்கி பலமிழந்துள்ள இலங்கையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள இந்தியாவும், மேற்குலக நாடுகளும் முயற்சிக்கின்றன.
தனது நாட்டு ரூபாயை, இலங்கையில் செயற்படுத்துவதற்கு இந்தியா முயற்சிக்கின்றது.
ஒருவேளை இது நடந்தால், இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறக்கூடிய சூழ்நிலை தானாகவே உருவாகிவிடும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கக்கோரி வழக்கு!
மெரினா மாற்றுத்திறனாளி பாதை: ம.நீ.ம. கோரிக்கை!