இலங்கையின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு அதிபர் செயலகத்திற்கு வெளியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகியதை அடுத்து இன்று(ஜூலை 20) புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி காலை 10.45 மணிக்கு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பதிவான 219 வாக்குகளில் 134 வாக்குகளை பெற்று இடைக்கால அதிபராக உள்ள ரணில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்றார். அவருக்கு மஹிந்த ராஜபக்சேவின் பொதுஜன பெரமுன கட்சி எம்.பி.க்கள் ஆதரவு அளித்தனர்.
இந்நிலையில், ராஜபக்சே குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இலங்கையில் மீண்டும் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
~அப்துல் ராபிக் பகுருதீன்