இலங்கை அதிபர் தேர்தல்… அனுரா குமார திசநாயக்க தொடர்ந்து முன்னிலை!
இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (செப்டம்பர் 22) எண்ணப்பட்டு வருகிறது. தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரா குமார திசநாயக்க தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
இருப்பினும் காலை முதல் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பெற்றிருந்த நிலையில், அவரது வாக்கு சதவிகிதம் தற்போது 41.7 சதவிகிதமாக குறைந்துள்ளது.
காலை 11 மணி நிலவரப்படி,
அனுரா குமார திசநாயக்க (தே.ம.க) – 17,32,386 வாக்குகள், 41.71%
சஜித் பிரேமதாசா (ஐ.ம.க) – 13,02,280 வாக்குகள், 31.35%
ரணில் விக்ரமசிங்கே (சுயேட்சை) – 7,01,820 வாக்குகள், 16.9%
அரியநேந்திரன் (தமிழ் வேட்பாளர்) – 1,74,316 வாக்குகள், 4.2%
நமல் ராஜபக்சா ( இ.பொ.ப) – 1,01,999 வாக்குகள், 2.46%
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லையா? – எடப்பாடிக்கு ஓபிஎஸ் பதில்!
இலங்கை அதிபர் தேர்தல் ரிசல்ட் – முன்னணி நிலவரம் இதோ!