இலங்கையில் ராணுவ ஆட்சியா?

அரசியல்

இலங்கையில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட இருப்பதாக வெளியான தகவலுக்கு அந்நாட்டு ராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து வன்முறை களமாக மாறியுள்ளது இலங்கை. அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் என்று ஒரு மாதத்துக்கும் மேலாக இலங்கை மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்த சூழலில் பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவரது ஆதரவாளார்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. ராஜபக்ச குடும்பத்தின் சொத்துகள், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் 40க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன

இலங்கை திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள பில்லோ ஹவுஸ் எனப்படும் பங்களாவில் ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை முழுவதும் கொந்தளிப்பாக காணப்பட்டு வரும் நிலையில் அங்கு பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவர்களையும், கொள்ளை அடிப்பவர்களையும் கண்டதும் சுட ராணுவத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

Govt Ads

அந்நாட்டு முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தனது ட்விட்டர் பக்கத்தில்,

“ராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்கு நாசகாரர்கள் பயன்படுத்தப்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் என்று நீதி மற்றும் ஜனநாயக ஆட்சிக்காக மிகவும் அமைதியான முறையில் ஒரு போராட்டத்தை நடத்தி வரும் நமது குடிமக்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே ராணுவ ஆட்சி கொண்டு வரப்படலாம் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரதன் இதை மறுத்துள்ளார்.

“சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு போலீஸாருக்கு உதவ ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *