Special force to catch Amarprasad Reddy

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை பிடிக்க தனிப்படை!

அரசியல்

Special force to catch Amarprasad Reddy

பிரதமர் வருகையின் போது ஆட்களை சேர்த்த விவகாரத்தில் பெண் பாஜக நிர்வாகியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவான பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

சென்னை கோட்டூர்புரம் பாரதி அவன்யூ பகுதியை சேர்ந்த சகோதரிகள் தேவி மற்றும் ஆண்டாள். பாஜக மாவட்ட துணை தலைவியாக ஆண்டாள் பதவி வகித்து வருகின்றார்.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை துவக்கி வைப்பதற்காக கடந்த 19ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது ஆட்களை அழைத்து வருவது தொடர்பாக ஆண்டாளுக்கும், அதே கட்சியை சேர்ந்த நிவேதா என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, கடந்த 21 ஆம் தேதி இரவு 8 மணியளவில் பாஜக விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர், மகளிர் அணியைச் சேர்ந்த நிவேதா, கஸ்தூரி மற்றும் அடையாளம் தெரியாத மூன்று பேர் உள்ளிட்டோர் ஆண்டாள் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் ஆண்டாளின் அக்கா தேவியின்  மண்டை உடைந்த நிலையில் அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Special force to catch Amarprasad Reddy

இதுதொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட  இருவரும் அளித்த புகாரில்,

‘பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கூறியதன் பேரில் எங்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்த அவரது ஓட்டுநர் ஸ்ரீதர் மற்றும் நிவேதா, கஸ்தூரி உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், அத்துமீறி தாக்குதல் என 147, 452, 323, 324, 354, 427, 506/1, 4 of women உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள கோட்டூர்புரம் காவல்நிலைய போலீசார், கார் ஓட்டுநர் ஸ்ரீதரை கைது செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவாகியுள்ள அமர்பிரசாத் ரெட்டியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ப்ளூ ஸ்டார் : ட்விட்டர் விமர்சனம்!

ஒன்றே கால் நிமிடத்தில் முடிந்த ஆளுநர் உரை- புது டிரண்ட்!

Special force to catch Amarprasad Reddy

+1
0
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *