தவறான தகவலுக்கு உண்மையைச் சொல்லுங்கள்: ஸ்டாலின்

அரசியல்

”தவறான தகவலாக இருந்தால், அதற்கு உண்மையான தகவலைச் சொல்லுங்கள்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக ஐடி விங் சார்பில் செப்டம்பர் மாதம் திராவிட மாதம் என கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தைத் திராவிட மாதமாகக் கொண்டாடும் வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், ட்விட்டர் ஸ்பேஸில் ‘திராவிடத்தைக் கொண்டாடுவோம்’ என்ற நிகழ்வை அறிமுகம் செய்தனர்.

இந்த சிறப்பு நிகழ்வின் கடைசி நாளான நேற்று (செப்டம்பர் 30) முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் ஸ்பேஸில் உரையாற்றினார்.

அப்போது அவர், “திராவிடம் தமிழருக்கு தன்னம்பிக்கை ஊட்டியது, சமூக நீதியை நிலைநாட்டியது. திராவிடம் பெண்களுக்கு சம உரிமையைப் பெற்று தந்தது. ’தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியது.

திராவிடம், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை தலைநிமிர வைத்தது. தொழில்நுட்பத்தை தமிழகத்தின் வளர்ச்சிக்கும் கழகத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும்.

special dravidia month

எதையும் படிக்காமல் வாட்ஸ் அப்பில் படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களுக்கு பதில் சொல்லி திருத்த முடியாது.

இணையத்தில் இயங்கும் நீங்கள், உங்கள் காலத்தை ஆக்கப்பூர்வமாக செலவு செய்யுங்கள். நமது சாதனைகளை சொல்லுங்கள். நமது கொள்கையை சொல்லுங்கள்.

தவறான தகவலாக இருந்தால் அதற்கு உண்மையான தகவலைச் சொல்லுங்கள். நமது எதிரிகள், மதவாத சாதியவாத சக்திகள் அவதூறு பேசுவார்கள், கொச்சையாக பேசுவார்கள், கோபப்படுத்திப் பேசுவர்கள், இவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்படுவோம்” என்றார்.

ஜெ.பிரகாஷ்

உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கொடுத்த உத்தரவாதம்: மனோஜ் பாண்டியன்

விளையாட்டுத் தனமாக பேசினேன்: ஓசி சர்ச்சைக்கு பொன்முடி பதில்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.