“அப்படியா? நல்லாயிருக்கு”: எடப்பாடி கருத்துக்கு உதயநிதி ரியாக்‌ஷன்!

அரசியல்

மாற்றுத்திறனாளிகள் அரசுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான வசதிகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று  உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மாற்றுத்திறனாளி மாணவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி பூங்காவினை ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின், அங்கு மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டார்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சாக்லேட் மற்றும் பரிசுகளை கொடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான ஆதரவையும் அன்பையும் தெரிவிக்கும் விதமாக ’Wheels of brotherhood’ என்கிற பைக்கர்ஸ் குழுவைச் சேர்ந்தவர்களோடு உதயநிதி கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை அமைத்தது போன்று மற்ற கடற்கரைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மரப்பாதை அமைப்பது குறித்து முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றார்.

மாற்றுத்திறனாளிகள் பொது பேருந்துகளில் பயணிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளும் பேருந்துகளில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உதயநிதி உறுதியளித்தார்.

அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வர ஏதுவாக, அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கொண்ட வகையில், கட்டிடங்கள் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

திராவிட மாடல் என்னும் கூற்று, அதிமுக ஆட்சியிலேயே கொண்டுவரப்பட்டது என்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, அப்படியா? நல்லாயிருக்கு, நல்லாயிருக்கு என உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துச் சென்றார்.

கலை.ரா

கிருஷ்ணா ஒரு ரோல் மாடல்!

மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொல்வதா? தலைமை ஆசிரியருக்கு சிறை!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *